மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்றால் ஒரு சொல்லைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என மனித இயல்பைப் பற்றிச் சொல் புதிது என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

"எல்லோருக்கும் ஒரு சொல் தேவைப்படுகிறது. உற்சாகமான சொல், ஆனந்தமான சொல், முக்கியமாக நம்மைப் புகழ்ந்து பேசக் கூடிய சொல். எல்லோருக்கும் தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனைச் சிலர் தவறான வகையில் யோசிப்பார்கள், 'எப்பவும் அவனைப் பத்தியே தான் பேசனும்னு நினைப்பான்'. ஆனால், இதனை ஒரு பழியாகக் குற்றமாகச் சொல்லாமல் மனித இயல்பாகவே எடுத்துக் கொள்ளலாமே. 'யாவர்க்குமாம் பிறர்க்கு இன்சொல் தானே' என்கிறார் திருமூலர். கடவுளுக்குச் செய்யக்கூடிய பூஜையைப் போன்றது, பசுவுக்குப் போடக்கூடிய புல்லைப் போன்றது, மற்றவர்களுக்குப் பசியாறக் கொடுக்கின்ற உணவைப் போன்றது, அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த நாம் சொல்கின்ற சொல்."

Who We Are